ETV Bharat / state

திருவரங்கம் தெப்பத்திருவிழாவிற்கு குளத்தில் நீர் நிரப்பும் பணி மும்முரம்! - Tank water filling ceremony at Srirangam Teppathi festival

திருச்சி: திருவரங்கம் ரங்கநாதர் கோயில் தெப்பத்திருவிழா 27ஆம் தேதி தொடங்குவதால் தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

Arrangement in full flow for Srirangam theppa thiruvizha

author img

By

Published : Feb 25, 2020, 5:38 PM IST

திருச்சி திருவரங்க ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா வரும் 27ஆம் தேதி தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தெப்பத்திருவிழாவின் முதல்நாள் ஹம்ச வாகனத்திலும், 2ஆம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ஆம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்பத்திருவிழாவின் 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ஆம் நாளான 5ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார்.

இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார்.

பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9ஆம் திருநாளான 6ஆம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

திருவரங்கம் தெப்பத்திருவிழாவிற்கு குளத்தில் நீர் நிரப்பும் பணி மும்முரம்!

மேலும் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம்வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

இந்நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், திருவரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, கோயில் ஊழியர்கள் செய்துவருகின்றனர். தண்ணீர் நிரப்பும் பணி திருவரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 5ஆம் தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.