ETV Bharat / state

அமமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்!

author img

By

Published : Jul 15, 2020, 8:32 AM IST

திருச்சி: கரோனா பரவல் உச்சநிலையை அடைந்து வருவதை தொடர்ந்து அமமுக திருச்சி மாநகர் சார்பில் வீட்டுக்கு வீடு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

Ammk party provide kabasura water
Ammk party provide kabasura water

திருச்சியில் கரோனா பரவல் உச்சநிலையை அடைந்து வருவதை தொடர்ந்து அமமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் வீட்டுக்கு வீடு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் திருச்சி தில்லை நகரில் உள்ள அமமுக அலுவலகம் முன்பு தொடக்கி வைத்தார்.

முன்னதாக, கட்சியினர் அனைவருக்கும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. கபசுரக் குடிநீர் வழங்குபவர்களுக்கு முகக் கவசம், கையுறை, குடிநீர் கோப்பை வழங்கப்பட்டன. அனைவரும் கபசுரக் குடிநீர் அருந்த வலியுறுத்தப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீரை ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்தது. அதன்படி மிதிவண்டி, இருசக்கர வாகனம் மூலம் வீடுதோறும் சென்று அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்களில் உள்ள 65 வார்டுகளிலும் முதன் முறையாக கபசுரக் குடிநீரை வீட்டுக்கு வீடு கொண்டுச் சென்று விநியோகம் செய்யும் பணியை மாநகர், பகுதி, வட்டம், கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.