ETV Bharat / state

பரப்புரையின்போது சிக்கித் தவித்த ஆம்புலன்சுக்கு வழிவிடச் செய்த எடப்பாடி! - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

திருச்சி: முசிறியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு வழிவடச் செய்து அனுப்பிவைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
author img

By

Published : Apr 10, 2019, 2:01 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டி பகுதியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை செய்தார். அப்போது 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்தது.

எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை காரணமாக சாலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கித் தவித்தது.

இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு கூட்டத்தினரை கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தலையிட்டு கூட்டத்தைக் கலையச் செய்து ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து பேசினார். இந்தப் பரப்புரையில் அதிமுக வேட்பாளர் சிவபதி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் துறையூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

Intro:திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார்.

Body:திருச்சி; முசிறியில் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் சிக்கித் தவித்தது.
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டி பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள கங்கை கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அதிமுக முதல் குரல் கொடுக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்படுவதுபோல் கங்கை கோதாவரி இணைப்பு திட்டம் செயல்படுத்த உடன் நாமக்கல் முதல் முசிறி வரையிலான பகுதிகளில் வளம்பெறும்.
காவிரியிலிருந்து தண்ணீர் உந்தப்பட்டு ஏரி, குளங்களுக்கு அனுப்பி விவசாயம் செழிக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். அதேபோல் தமிழகம் முழுவதும் 1,000 தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயம் செழிப்பதற்கான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தும்.
அதேபோல் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாத அளவுக்கு ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் சென்னையில் 2,000 கோடி ரூபாயில் உணவு பூங்கா அமைக்கப்படும். இங்கு விவசாயிகள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலமும் விற்பனை செய்து கொள்ளலாம். அதேபோல் 900 ஏக்கரில் கால்நடை பூங்காவும், சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒரு மாத காலம் வரை இலவசமாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். தமிழக மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாட ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு நீதிமன்றம் சென்று ஸ்டாலின் தடைபெற்றார். பின்னர் தமிழக அரசின் மேல்முறையீடு காரணமாக நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதேபோல் ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு இந்த திட்டத்தை ஸ்டாலின் தடுத்து நிறுத்திவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் இந்த 2,000 ரூபாய் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாயம் வழங்கப்படும். உலகிலேயே ஏழைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை தடுத்து நிறுத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் ஆக தான் இருப்பார்.
செயல்படுத்தக் கூடிய திட்டங்களை தான் தமிழக அரசு அறிவிக்கும். அறிவித்த திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவோம் என்றார்.

முசிறி கைகாட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது 108 ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்தது.
முதல்வர் பிரச்சாரம் காரணமாக சாலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாகன நெரிசலில் சிக்கித் தவித்தது. ஆம்புலன்ஸ் வருவதை அறிந்த முதல்வர் தனது பேச்சை நிறுத்தி வழி விடுமாறு கூட்டத்தினரை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைக்க செய்து ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமி தொடர்ந்து பேசினார்.
இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சிவபதி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் துறையூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

Conclusion: பிரச்சார கூட்டத்தில் சிக்கி தவித்த ஆம்புலன்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு வழிவிடச் செய்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.