திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 32 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதுவரை ஒன்பது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.
இதில் ஆறாவது சுற்று வரை திமுக வேட்பாளர் பழனியாண்டி முன்னிலை வகித்துவந்த நிலையில், 11ஆவது சுற்றில் கு.ப. கிருஷ்ணன் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளார். அதன் முடிவுகள்:
அதிமுக- 34402
திமுக- 33252
நாம் தமிழர்- 5778
அமமுக-1259
ஐ.ஜே.கே- 346
நோட்டா- 943
இதன்மூலம் அதிமுக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் திமுக வேட்பாளரைவிட 1150 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளார்.
இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒரு தொகுதியில் அதிமுக முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராதாபுரம் தொகுதியில் தொடர்ந்து அப்பாவு முன்னிலை