ETV Bharat / state

வேளாண் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற “மாணவர் சங்கமம்”! - வேளாண் கல்லூரி

திருச்சி: வேளாண் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் ’மாணவர் சங்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது கல்லூரி நினைவுகளை பகிர்ந்துகொண்டது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

agricultural-college-alumni-participate-in-student-association
agricultural-college-alumni-participate-in-student-association
author img

By

Published : Feb 10, 2020, 11:35 AM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக திருச்சி நவலூர்குட்டப்பட்டில் 1902 ஆம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் 2017 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கினார்கள்.

மேலும் 25 ஆண்டுக் காலமாக மாணவர்கள் நடத்தி வரும் இச்சங்கம் சார்பில் 2016 ஆம் ஆண்டு 36 லட்சம் ரூபாயில் கல்லூரிக்கு நுழைவு வாயில் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சங்கமம் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மாசிலாமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் திருச்சி வேளாண்மை, தோட்டக்கலை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முத்திரை, முன்னாள் மாணவர்களுக்கான வலைதளம், முன்னாள் மாணவர்களால் சேகரிக்கப்பட்ட போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், கோவையில் உள்ள தாவரவியல் பூங்காவை புதுப்பிப்பதற்கான நிதி ஆகியவை இவ்விழாவில் வழங்கப்பட்டது.

வேளாண் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற “மாணவர் சங்கமம்”

இதைத்தொடர்ந்து வேளாண் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் கலந்துகொண்டன.

இதன் மூலம் வேளாண் மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய்; ரசிகர்கள் உற்சாகம்

Intro:25 ஆண்டு கால வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்களது நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். Body:திருச்சி:
25 ஆண்டு கால வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்களது நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக திருச்சி நவலூர்குட்டப்பட்டில் 1902 ஆம் ஆண்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் 2017 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்கினார்கள். 25 ஆண்டுகால மாணவர்கள் நடத்தி வரும் சங்கம் சார்பில் 2016 ஆம் ஆண்டு 36 லட்சம் ரூபாயில் கல்லூரிக்கு நுழைவு வாயில் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சங்கமம் நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மாசிலாமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் திருச்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முத்திரை, முன்னாள் மாணவர்களுக்கான வலைதளம், முன்னாள் மாணவர்கள் சேகரிக்கப்பட்ட போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், கோவையில் உள்ள தாவரவியல் பூங்காவை புதுப்பிப்பதற்கான நிதி விழாவில் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மரம் நடும் விழா நடைபெற்றது. மாலை வேளாண் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்ட வேளாண் சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் கலந்துகொண்டன. இதன் மூலம் வேளாண் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த கல்லூரியில் பயின்ற சுமார் 20 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 25 ஆண்டு கால நண்பர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அவர்களது மாணவர் பருவ நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.