மத்திய அரசு அமைத்துள்ள குற்றவியல் சட்ட சீரமைப்புக்கான ராபிர் சிங் கமிட்டியைக் கலைக்க வேண்டும், மேலும் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.