ETV Bharat / state

என் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது: பவர் ஸ்டார் சீனிவாசன்

author img

By

Published : Aug 21, 2019, 9:40 PM IST

Updated : Aug 21, 2019, 10:15 PM IST

திருச்சி: முறையாக வாதாடாத வழக்கறிஞரிடம் சம்பளம் போக மீதி பணம் கேட்டதால் என் மீது அவர் பொய் வழக்கு தொடுத்துள்ளார் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

case-against-power-star

தமிழ்திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் மீது துறையூரைச்சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வரதராஜன் என்பவர், காசோலை மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இவ்வழக்கிற்கு மணப்பாறையைச் சேர்ந்த பாண்டி என்பவரை வழக்கறிஞராக நியமித்திருந்தார்.

இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிர் பாண்டிக்கும், பவர் ஸ்டாருக்கும் இடையில் சம்பள பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் பாண்டி சம்பளம் கேட்டதற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாக கடந்த மே மாதம் மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கறிர் பாண்டி வழக்குப் பதிவு செய்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

இந்நிலையில் பவர் ஸ்டார் இவ்வழக்கில் முன்ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் மூன்றாம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மணப்பாறை காவல் நிலையத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆஜராகி காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுப்பட்டிருந்தது.

இந்த வழக்கு குறித்து பவர் ஸ்டாரிடம் தொலைபேசியில் கேட்ட போது, 'இந்த வழக்கு குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை. நான் யாரையும் மிரட்டும் தொனியில் பேசவில்லை. மேலும் துறையூர் நீதிமன்றத்தில் என்னுடைய வழக்கு ஒன்றிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய பாண்டி முறையாக வாதாடாததால் துறையூர் நீதிமன்றம் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இது பற்றி பாண்டியிடம் தொலைபேசியில் பேசி முறையாக வாதாடாததால், கொடுத்த பணத்தில் சம்பளத்தை தவிர மீதி பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். அதை தராமல் சமாளிக்கவே என் மீது பொய் வழக்கு தொடுத்துள்ளார்.' என கூறினார்.

வழக்கறிஞர் பாண்டி இது பற்றி கூறும் போது, பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னை மிரட்டியதற்கான ஆதாரம் உள்ளதாக தெரிவித்தார்.

Intro:நீதிமன்ற உத்தரவுப்படி மணப்பாறை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான பவர் ஸ்டார் சீனிவாசன்.

Body:கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பவர் ஸ்டார்சீனிவாசன்.இவர்மேல் துறையூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வரதராஜன் செக் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தார்.இவ்வழக்கிற்கு மணப்பாறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டி என்பவரை வழக்காட நியமித்து இருந்த நிலையில் பாண்டி தனக்கு சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பவர் ஸ்டார் ஆபாசமாகவும் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகவும் கூறி மே மாதம் மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பாண்டி வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் கடந்த மாதம் மூன்றாம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை கிளை கோர்ட் உத்தரவிட்டதுடன்,அத்துடன் சம்பந்தப்பட்ட மணப்பாறை காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்கள் நேரில் ஆஜராகி போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி கடந்த மூன்று நாட்களாக மணப்பாறை காவல்நிலையத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த வழக்கு குறித்து பவர்ஸ்டார் சீனிவாசனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது : இந்த வழக்கு குறித்து தனக்கு எந்த பயமும் இல்லை என்றும்,தான் யாரையும் மிரட்டும் தொணியில் பேசியது இல்லை என்றும் கூறினார்.மேலும் துறையூர் நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கு ஒன்றிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்த பாண்டி முறையாக வாதாடததால் துறையூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்ததாகவும்,இது குறித்து பாண்டியிடம் தொலைபேசியில் கேட்டபோது தனக்கு சம்பள தர வேண்டும் என்று கூறியதாகவும்,அப்போது வழக்கிற்கு முறையாக ஆஜராகாததால் ஏற்கனவே தான் கொடுத்த பணத்தில் சம்பளத்தை தவிர மீதி பணத்தை தனக்கு திரும்ப தருமாறு கேட்டதாகவும்,இந்த மீதி பணத்தை தராமல் சமாளிக்கவே இவர் தன் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளார் என வழக்கறிஞர் பாண்டி மீது தனது குற்றச்சாட்டை பதிவு செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர் பாண்டியிடம் தொலைபேசியில் கேட்டபோது: பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை மிரட்டியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Aug 21, 2019, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.