கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இஸ்லாமியப் பெண்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து நிவாரண உதவிகளைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் மீதுதான் அரசுக்கு அக்கறை - கனிமொழி