ETV Bharat / state

10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை திறக்க பிரபு கோரிக்கை - Actor Prabhu Request to TN Govt

திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை திறக்க பிரபு கோரிக்கை

author img

By

Published : Apr 23, 2023, 10:40 PM IST

நடிகர் பிரபு செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: ‘எங்கள் முதல்வர், எங்கள் பெருமை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படக் கண்காட்சியை திருச்சியில் திரைப்பட நடிகர் பிரபு இன்று (ஏப்ரல் 23) தொடங்கி வைத்தார். திருச்சி தூய வளனார் பள்ளி மைதானத்தில், முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலான இந்த கண்காட்சிக்கு, திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கண்காட்சியை பிரபு பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் எனக்கு சிறு வயதில் இருந்து பழக்கம் உண்டு. அவர் கடினமாக உழைக்கக் கூடியவர். இன்று அவர் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்திருப்பதற்கு, அவரது கடின உழைப்பு, ‌விடாமுயற்சிதான் காரணம். திமுகவின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார்.

இதற்கெல்லாம் அவரது உழைப்புதான் காரணம். அவர் மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்து வருகிறார் என்பதை, இந்த புகைப்படக் கண்காட்சி மூலம் நாம் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்டோர் சிறு‌ வயதில் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஷெரிஃப் என்கிற ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றி வந்துள்ளோம்.

சொந்தக்காரர்களும், நண்பர்களும் அதிகம் திருச்சியில் இருக்கிறார்கள். திருச்சி பாலக்கரையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின் சிலையை திமுக அரசு திறக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதை வேண்டுகோளாகவும் முன் வைக்கிறேன். திமுகவில் இருப்பவர்களுக்கு கருணாநிதி மீது எவ்வளவு பிரியமோ, பாசமோ, அதே அளவுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும் பிரியம் வைத்துள்ளார்கள்.

விரைவில் திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜியின் திருவுருவச் சிலை திறக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன் மற்றும் ஸ்டாலின் குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "திமுக சொத்து பட்டியல் என நேரத்தை வீணடிக்கும் அண்ணாமலை" - வேல்முருகன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.