மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இதர மாநில தொழிலாளர்கள் அரசு பேருந்துகள் மூலம் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெங்களூரு வழியாக நேற்று (மே 12) ஓசூர் வந்தனர்.
அதன் பின்னர் ஓசூரிலிருந்து அவரவர் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் சிறப்பு பேருந்து மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. இதையடுத்து ஒன்பது பேரையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுரை வழங்கி ஆம்புலன்ஸ் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை: காவலர்கள் பணியிடை நீக்கம்