திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 57 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் ஏற்கனவே 51 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த நபர்கள், சென்னையினை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து வந்த நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த 4, 5ஆம் தேதிகளில் ஐந்து நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 256 நபர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 253 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. மூன்று நபர்களுக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சேலத்திலும், மற்றொரு நபருக்கு கரூரிலும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் புதிதாக 5 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 36 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க...துபாயிலிருந்து சென்னை வரும் விமானங்கள்: முதன்மை செயலாளர் ஆய்வு!