ETV Bharat / state

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 5 பேர் கைது - காவல் துறையினருக்கு ரகசிய தகவல்

திருச்சி: மணப்பாறையில் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த ஐந்து பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை 5 பேர் கைது
author img

By

Published : Sep 27, 2019, 4:22 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா, லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறை நகர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர்களை காவல் துறையினர் பிடித்தனர்.

மேலும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முருகேசன், ஜோசப் தியாகராஜன், வேளாங்கண்ணி, மனோகர், செந்தில்குமார் ஆகிய ஐந்து பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் பணத்தையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் லாட்டரி குலுக்கல்: 14பேரை கைது செய்த தனிப்படையினர்

Intro:மணப்பாறையில் கள்ளத்தனமாக லாட்டரி விற்ற 5 பேர் கைது - தனிப்படை அதிரடி.Body:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மணப்பாறை நகர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர்களை கையும்களவுமாக பிடித்தனர்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றதாக முருகேசன், ஜோசப் தியாகராஜன், வேளாங்கண்ணி, மனோகர், செந்தில்குமார் ஆகிய 5 பேர் கைது செய்து அவர்களிடம் இருந்து - ரூ 60000/- ரொக்கம் மற்றும் ரூ.25000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.