திருச்சி: திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரப் பகுதிகளில் ஊரடங்கின் நிலை குறித்தும், காவல் துறையினரின் கண்காணிப்புப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில்,
'திருச்சி மாநகரத்தில் ஞாயிறு ஊரடங்கான இன்று தேவையில்லாமல் வெளியே சுற்றிய, 200 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கிற்குப்பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தாலும், கரோனாவின் ஆபத்தை முழுமையாக உணராமல் இருக்கின்றனர்.
திருச்சி மாநகரில் சுழற்சி முறையில் 1000 காவலர்கள் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவு நேர ஊரடங்கில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இதையும் படிங்க:2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம்