திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் நேற்று (செப்டம்பர்7) ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 235ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 926 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். நேற்று ஒரே நாளில் 130 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 7ஆயிரத்து204 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 907 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.