ETV Bharat / state

'ஊராட்சி மன்ற தலைவியை காணவில்லை' - 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததைக் கண்டித்து இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'ஊராட்சி மன்ற தலைவியை காணாமே' - 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 4, 2020, 8:56 PM IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள முகவனூர் ஊராட்சியில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவியை காணவில்லை எனக் கூறியதுடன் காணோமே! காணோமே! கண்டுபிடி! கண்டுபிடி! என கேலியான கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:100 நாள் வேலைத் திட்டத்தை 250 நாளாக உயர்த்த வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.