திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணாவி நகரின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜ்முகமது மனைவி ஜமுனா யாஸ்மீன். கணவர் ஆந்திரா மாநிலத்தில் காய்கனி வியாபாரம் செய்துவரும் நிலையில், தனது குழந்தைகளுடன் வசித்து வரும் ஜமுனா யாஸ்மீன், ஞாயிற்றுக்கிழமை உறவினரின் திருமண விழாவிற்காக அருகேயுள்ள தோகைமலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். பின் தான் திருமணத்திற்கு அணிந்து சென்ற நகைகளை பீரோவில் வைப்பதற்காக பீரோவை திறந்தபோது அங்கு லாக்கர் மட்டும் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 10 சவரன் நகைகள், 5 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.1500 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஜமுனா யாஸ்மீன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு - காவல்துறை நடவடிக்கை!