ETV Bharat / state

+2 மாணவியை கடத்திச் சென்ற கணவன் - இரண்டு குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் மனைவி!

திருப்பத்தூர் : 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கணவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

+2 மாணவியைக் கடத்திச்சென்ற கூலித் தொழிலாளி குரு

author img

By

Published : Sep 15, 2020, 2:16 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த செல்லரபட்டி கோபாலகிருஷ்ணன் வட்டம் பகுதியை சேர்ந்த கதிரவன் (எ) குரு (35). கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் கோமதி (17) என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடத்திச் சென்றதாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இருப்பினும், அந்தப் புகார் மீது கந்திலி காவல் நிலைய அலுவலர்கள் உரிய சட்ட ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருதாகவும், குருவை கைது செய்யாமல் மேம்போக்காக வழக்கை நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குருவின் மனைவி வெள்ளிமணி (32), தனது இரு குழந்தைகளோடு இன்று திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,"எனது கணவன் குரு வேறு பெண்ணுடன் ஓட்டம் பிடித்துவிட்டார். எனவே, எனது கணவனை மீட்டுத்தாருங்கள் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருகிறேன். என் வாழ்க்கைக்கு வழி தேடி கொடுங்கள்" என கூறியுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விரைவில் உனது கணவரை மீட்டு தருகிறோம் என்று ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.