ETV Bharat / state

படகுகளை விடுவிக்க மீனவர்கள், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் கடற்படைக்கு வழங்க உத்தரவு- இலங்கை அரசின் பிடிவாதம்! - TN BOAT HANDOVER TO SRI LANKA NAVY

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உட்பட 13 படகுகளை இலங்கை கடற்படையிடம் வழங்குமாறு புதிய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

படகு
படகு கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 11:38 AM IST

சென்னை: இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், தமிழக மீனவர்களின் 13 படகுகளை இலங்கை கடற்படையின் பயன்பாட்டுக்கு அளிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்திய மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை பிடித்து படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், பறிமுதல் செய்த படகுகளை அரசுடைமை ஆக்கியது.

அவ்வாறு பிடிபட்ட படகுகள் மயிலாட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, துறைமுகத்தில், நல்ல நிலைமையில் உள்ள 13 படகுகளை இலங்கை கடற்படை பயன்பாட்டிற்கு வழங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த தமிழக மீனவ படகு உரிமையாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: 12 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இதுகுறித்து, கடற்தொழில் துறை இயக்குநர் எல்.ஜி.ஆர்.இசுராணி கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள உத்தரவில், "மன்னாரில் உள்ள 5 படகுகளும், யாழ்ப்பாணத்தில் உள்ள 8 படகுகளும் என மொத்தம் 13 படகுகளை இலங்கை கடற்படை பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

படகுகளின் விவரம்:

  1. IND/TN/08/MM.346
  2. IND/TN/08/MM.1872
  3. IND/TN/08/MM/1436
  4. IND/TN/06/MM/6824
  5. IND/TN/10/MM/693
  6. IND/TN/10/MM/405
  7. IND/TN/10/MM/2573
  8. IND/TN/11/MM/857
  9. IND/TN/11/MM/298
  10. IND/TN/11/MM/28
  11. IND/TN/16/MM/1872
  12. IND/TN/16/MM/1861 மற்றும்
  13. IND/PY/PK/MM/1499 ஆகிய படகுகள் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழக மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும்போதெல்லாம், படகுகளுடன் சேர்த்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்திய அரசின் சார்பில் இலங்கை தூதரகத்தின் மூலம் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை விடுவிக்கவும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதையெல்லாம் மீறி இப்போது தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பது மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மீண்டும் ஒருமுறை தமிழக அரசின் சார்பில் மீனவர்களின் படகுகளை விடுவிக்கும்படி மத்திய அரசின் வழியே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.