ETV Bharat / state

'ஸ்டெர்லைட் மூடப்பட்டால் 3 மில்லியன் டன் சரக்கு கையாளுகை பறிபோகும்' - துறைமுக சரக்கு கப்பல் முகவர், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் சங்கம்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்பட்டால் 3 மில்லியன் டன் சரக்கு கையாளுகை பறிபோகும் என துறைமுக கப்பல் முகவர் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் மூடப்பட்டால் 3 மில்லியன் டன் சரக்கு கையாளுகை பறிபோகும் !

author img

By

Published : Aug 27, 2020, 5:55 PM IST

கரோனா ஊரடங்கின் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் சரிவை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. தூத்துக்குடி வேல்ர்ட் டிரேட் அவென்யூ பகுதியில் உள்ள துறைமுக சரக்கு கப்பல் முகவர், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பின்னர் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்வாகிகள் கூறுகையில், "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழிலானது பாதிப்படைந்துள்ளது. ஏற்றுமதியில் 40 விழுக்காடு அளவுக்கும், இறக்குமதியில் 15 விழுக்காடு அளவுக்கும் சரக்கு கையாளுகை குறைந்துள்ளது. தூத்துக்குடியில் 10 லட்சம் சதுரடி பரப்பளவில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்து சரக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இதில் நேரடி-மறைமுகமாக சுமார் 50 ஆயிரம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் கையாளுதல் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவை வீடு கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மிகப் பெரிய முதலீட்டு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. முதலீடுகள் அனைத்தும் வங்கிகளில் வழங்கப்பட்டும் கடன்களைநே நம்பி உள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் தவணைகளை தள்ளி வைத்துள்ளனரே தவிர செலுத்த வேண்டிய கடன் நிலுவை தொகைகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. தொழில் நலிவடைந்து நேரத்தில் கடன் தவணைகளை ரத்து செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகம் சார்ந்த தொழில் நகரம் என்பதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருக்கத்திற்கு என்ன நடவடிக்கை தேவையோ அதை எடுக்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்களையும், பிற மாநிலங்களில் இல்மனைட், கார்னெட் ஏற்றுமதி இறக்குமதி செய்வது போல் தமிழ்நாட்டில் அதை வரைமுறைப்படுத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

அண்மையில், உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மேலும் பின்னடைவை சந்திக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் ஆண்டுக்கு மூன்று மில்லியன் டன் சரக்கு கையாளுகைப் பறிபோகும்.

தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் 65 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறன் இருந்தும் கடந்த ஆண்டில் வெறும் 50 விழுக்காடு அளவுக்கே சரக்கு ஏற்றுமதி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்காகவும் புதிய தொழில் வாய்ப்புகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மக்களின் ஆதரவும் நிச்சயம் வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் எது நல்லதோ அதை ஆலோசித்து செயல்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.