தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் பாதுகாப்புப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் இன்று (நவ.19) நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., ஆடலரசன் தலைமையில் கட்டிமேடு ஆதிரெங்கம் அரசு பள்ளியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் கொற்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ ஆடலரசன், மக்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதா என அங்கு பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தங்களுக்கு குடியிருப்பு வளாகம் அமைத்து தர வேண்டுமென மருத்துவ ஊழியர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.