இது தொடர்பாக அவர் இன்று (நவ. 09) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மீனவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்க வழங்கிய இந்தத் தீர்ப்பு சரியானது அல்ல. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று, இரு நாட்டு மீனவர்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த இது வழிவகை செய்யும்.
மேலும், படகுகளை நம்பி வாழக்கூடிய மீனவர்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இது இரு நாட்டினிடைய நட்பையும் கேள்விக்குறியாக்கும்.
எனவே, இதில் மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட நல்ல தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.