ETV Bharat / state

எழுவர் விடுதலை : ஆளுநருக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்! -  ஜவாஹிருல்லா - Perarivalan release

சென்னை : ஏழு தமிழர் விவகாரத்தில் ஆளுநருக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க அரசு அழுத்தம் தர வேண்டும்! -  பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா

author img

By

Published : Nov 4, 2020, 12:56 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலையில் தேவையில்லாமல் காலத்தை வீணாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு என கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும் ஒரு பரிந்துரை தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

தமிழ்நாடு அரசின் இந்தத் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளதை மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சுட்டிக்காட்டி இவ்விஷயத்தில் விரைந்து முடிவெடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் 7 தமிழர்களின் விடுதலையில் ஆளுநர் தேவையில்லாமல் காலத்தைத் தாழ்த்தி அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக உள்ளார்.

தமிழ்நாடு அரசும் உரிய அழுத்தங்களைக் கொடுக்காமல் மௌனமாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுக்க காலதாழ்த்திவருவதால் தம்மை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கை நேற்று (நவ.3) விசாரித்த நீதியரசர் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, 7 தமிழர்களின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்து வருவதைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான எம்.டி.எம்.ஏ வின் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அதன்பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியும் என்றும் ஆளுநர் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கிற்கும் எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் அந்த அமைப்பின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவை குறித்த ஆவணங்களையெல்லாம் ஆளுநரிடம் அளித்துத் தெளிவுபடுத்தினீர்களா?’’ எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி தனது அதிருப்த்தியை வெளிப்படுத்தி உள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.