இது குறித்து அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது உயர் கல்வி நிறுவனங்களின் கடமை. இதை உறுதிப்படுத்தும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களில் தனி புகார் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து புகார் தெரிவிக்க 18001 11656 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அதன்படி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான தனி புகார் பிரிவு அமைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
புகார்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சாக்சம் போர்ட்டலில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.