ETV Bharat / state

காதலித்து ஏமாற்றப்படும் இளம்பெண்கள்: 53,000 பேர் வீட்டுவிட்டு வெளியேறியதாக புகார்!

சென்னை: இளம்பெண்கள் பிறரின் ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பெற்றோர்களின் அன்பு பாராட்டாமையே காரணமென சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அன்பு கிடைக்காத ஏக்கத்திலேயே இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்!

author img

By

Published : Sep 30, 2020, 11:37 PM IST

காணாமல்போன 10ஆம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக்கோரி, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், பி. வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நடைபெறுகிறது.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது? திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசும், காவல் துறையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப். 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம், மாணவியை முன்னிலைப்படுத்திய காவல் துறையினர், அவர் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றிய ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் வீட்டைவிட்டு தனியாகச் சென்ற பெண்கள் குறித்த அறிக்கையையும் தாக்கல்செய்தனர். அதில், "கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டுச் சென்றதாக 53 ஆயிரத்து 898 புகார்கள் பெறப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடாததும், அவர்களுக்கு உரிய அன்பும் பரிவும் கிடைக்கப்பெறாததும்தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த விவகாரத்தில் மத்திய சமூக நலத்துறையை பதில் மனுதாரராக இணைக்க உத்தரவிட்டனர்.

இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கின் இறுதி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.