ETV Bharat / state

வேளாண் கல்லூரி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு!

author img

By

Published : Sep 13, 2020, 12:27 AM IST

சென்னை :தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கையை அரசிடம் நீதியரசர் கே.சந்துரு ஒப்படைத்தார்.

வேளாண் கல்லூரி கல்வக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு தனியார் வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் கே.சந்துரு தலைமையில் கல்விக் கட்டணக் குழு ஒன்றை அரசு நியமித்தது.

இதனைத் தொடர்ந்து, இணைப்பு வேளாண்மைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2020-2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை பரிந்துரை செய்து நீதியரசர் கே.சந்துரு தம்முடைய அறிக்கையை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணுவிடம் இன்று (12.9.2020) நேரில் சமர்ப்பித்தார்.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.