ETV Bharat / state

அதிமுக செயற்குழு கூட்டத்தில் வாக்குவாதம் நடக்கவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் - Opposition parties are fighting against the central government's agricultural laws for political reason

சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றதாக தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் போராடுகின்றன - அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Sep 29, 2020, 3:47 PM IST

சென்னையின் முன்னாள் மேயரான மறைந்த என்.சிவராஜின் 129ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், " சென்னை ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் சிறப்பான வகையில் அமைந்திருந்தது. அங்கு வாக்குவாதங்கள் நடந்ததாக வெளியே சொல்லப்படுபவை எல்லாம் உண்மையல்ல.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒருபோதும் பாதிப்படையாது. புதிய வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன.

அந்தப் போராட்டங்களினால் விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் எந்த நலனும் ஏற்படப்போவதில்லை" என அவர் தெரிவித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.