ETV Bharat / state

விண்ணைத் தொட்ட வெங்காய விலை - குறைய இரண்டு மாதங்களாகலாம்!

author img

By

Published : Oct 23, 2020, 8:50 PM IST

சென்னை: வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை குறைய இரண்டு மாதங்களாகும் எனக் கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி. ராஜசேகரன் கூறியுள்ளார்.

விண்ணைத் தொட்ட வெங்காய விலை - குறைய இரண்டு மாதங்களாகலாம் !

சென்னை கோயம்பேடு மொத்தவிலை காய்கறிச் சந்தையில் வெங்காயம் கிலோ ஒன்று 60 முதல் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் கிலோ 90 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் மழைப் பொழிவின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து குறைவாக உள்ளதால் வெங்காய விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பேசிய கோயம்பேடு கூட்டமைப்புத் தலைவர் ஜி.டி. ராஜசேகரன் கூறுகையில், "நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காய லோடு வந்த நிலையில் தற்போது 40 லாரிகள்தான் வருகிறது.

அதிலும், 20 லாரிகள் ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகிறது. கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டபோது ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கொண்ட மூட்டை ஒன்று தற்போது தரத்துக்கு ஏற்ப மூன்றாயிரத்து 500 ரூபாய் முதல் நான்காயிரத்து 500 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை குறைய இரண்டு மாதங்களாகும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.