ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் அம்மன், பிள்ளையார், பெருமாள் ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்தவகையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த வழிபாட்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
அதிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் அதிகாலை நிர்மாலைய பூஜைகளுடன் தொடங்கி உற்சவ மூர்த்திக்கு திருமுழுக்கு, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட தொடர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் செய்து சுாமி தரிசனம் பெற்றனர்.
இதனைப் போன்று பறக்கை மது சூதனபெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோயில், திருவட்டார் ஆதிகேசவன் பெருமாள் கோயில் ஆகிய பிரசித்திப் பெற்ற கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
குமரியில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு! - பெருமாள் கோயிகளில் சிறப்பு பூஜை
நாகர்கோவில்: குமரியில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.