ETV Bharat / state

கொடைக்கானல் வனப்பகுதி சாலைக்கு தடைக்கோரிய வழக்கு - ஏப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - High Court Madurai Bench News

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வட்டக்கானலில இருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை கோரிய வழக்கின் விசாரணையை வரும் ஏப். 13ஆம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை
author img

By

Published : Apr 8, 2022, 8:14 AM IST

மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'பழனி, பெரியகுளத்தின் சில பகுதிகள் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி ஆகியவற்றை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டது. கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான புல் வகைகள், தூய்மையான நீர் நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது.

அனுமதி பெறாத சாலைப் பணி: இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் மார்ச் 2ஆம் தேதி ஆய்வு செய்து, வட்டக்கானல் பகுதி வழியாக டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தை அடைவதற்கு வனப்பகுதி வழியாக சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இப்பகுதியில் சாலை அமைக்க முறையான அனுமதி பெறப்படவேண்டும். ஆனால், அதுபோல எவ்விதமான அனுமதியும் பெறவில்லை.

ஒத்திவைப்பு: ஆகவே, கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பாக நேற்று (ஏப்.7) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், "வனம் வழியாக எந்த புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. நீண்ட ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தின் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியே நடைபெறுகிறது" என தெரிவிக்கப்பட்டது. அதனை பதில் மனுவாக தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இவ்வழக்கை ஏப்ரல் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் வனப்பகுதியில் சாலை திட்டம்: மாநில தலைமை வனப்பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.