ETV Bharat / state

மத்திய அரசின் கைப்பாவையாக துணைவேந்தர் சுரப்பா செயல்படுகிறாரா ? - ராமதாஸ் கேள்வி - தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்ன பயன்

சென்னை : தமிழ்நாடு அரசுடன் எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல் மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது நடவடிக்கை வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் கைப்பாவையாக துணைவேந்தர் சுரப்பா செயல்படுகிறாரா  ? - ராமதாஸ் கேள்வி

author img

By

Published : Oct 11, 2020, 1:47 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ் தகுதி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அவற்றில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.

உயர்புகழ் தகுதி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த ரூ.2,750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், அதில் ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கும்; மீதமுள்ள ரூ.1,750 கோடியை தமிழ்நாடு அரசும் அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது.

இதில் சில சிக்கல்கள் இருப்பதால் இது குறித்து முடிவெடுக்க அமைச்சரவைக் குழு கூட்டத்தை நடத்தியது. எனினும், அரசு எந்த கொள்கை முடிவும் அது தொடர்பாக எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுடன் எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல் மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தின் சொந்த ஆதாரங்களில் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடி நிதியை திரட்டிக் கொள்ள முடியும் என்றும் அதைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சுரப்பாவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வு காணாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறுவதால் எந்த பயனும் கிடைக்காது. அண்ணா பல்கலை. உயர் புகழ் கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டாலும் கூட, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், மாணவர் சேர்க்கைக் கொள்கையும் கடைபிடிக்கப்பட்டால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் எந்தப் பயனும் கிடைக்காது. வெளிமாநில மாணவர்களும், உயர்வகுப்பினரும் மட்டும் தான் மட்டும் தான் பயனடைவர்.

அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடி நிதியை திரட்டுவதாக வைத்துக் கொண்டாலும் அதற்காக கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை கடுமையாக உயர்த்த வேண்டியிருக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இது ஏற்கத்தக்க யோசனை அல்ல.

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் துணை வேந்தர் சுரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறாரோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மேலும், துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்தை 3 ஆண்டுகளுக்கு வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே. அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் சுரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

69% இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை முறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.