ETV Bharat / state

இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள்

சென்னை : விபத்துக்களில் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு !

author img

By

Published : Sep 24, 2020, 5:04 AM IST

வாகன காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அதில், "நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த சண்முகம் என்பவருக்கு 1,07,100 ரூபாய் இழப்பீடாக வழங்கும்படி நாமக்கல் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக நேற்று (செப்.23) விசாரணைக்கு வந்தது.

அப்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் சண்முகம், போலியாக இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணை தெளிவாக அவர் கூறவில்லை. சம்பவம் தொடர்பாக தாமதமாக புகார் அளிக்கப்பட்டது" என வாதிட்டார்.

அவரது வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி சுப்பிரமணியம், மனுதாரரின் வாதத்தை ஏற்று சண்முகத்திற்கு இழப்பீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்வதாகக் கூறினார்.

”மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு நியாயமாக இருப்பதை உறுதி செய்ய, விபத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நடைமுறையை சீராக்க, விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் வழக்குப் பதிவு செய்து அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேலும், அந்த வழக்கு குறித்து விரைந்து விசாரித்து 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட வேண்டும்” எனவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டது.

அதேபோல, விபத்துக்களில் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் இல்லாத வாகனங்களை விடுவிக்க கூடாது. அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விபத்து அறிக்கையைப் பராமரித்து, அவற்றை ஏழு நாள்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனருக்கு அறிவுறுத்தினார்.

தீர்ப்பாயங்களில் வழக்கு தொடரும் முன், சமரசம் செய்து கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால் அதற்கு அனுமதியளிக்க வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.