இது தொடர்பாக மகிழ்மதி அறக்கட்டளை சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா ஊரடங்கு காரணமாக பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக, அந்நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத சூழலில், வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உள்ள நிலையில் பல தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் நெருக்கடியை கண்டு வருகின்றனர். எனவே, தமிழக வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஒதுக்கப்படுவது நியாயமில்லை.
அரசு மற்றும் தனியார் துறைகளிலும் தமிழர்களுக்கு 70 விழுக்காடு வேலைவாய்ப்பை முன்னுரிமை அடிப்படையில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் முனைவர் ரா.நந்தகோபால் ஆகியோரை விரைவில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் திவ்யா கூறியுள்ளார்.