ETV Bharat / state

கட்டாய கல்வி உரிமை சட்டம் : 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசின் பதிலை கோரும் நீதிமன்றம் !

சென்னை : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 விழுக்காடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் மனு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டம் : 25% மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசின் பதிலை கோரும் நீதிமன்றம் !

author img

By

Published : Aug 4, 2020, 10:41 PM IST

தமிழ்நாட்டில் 6 வயது முதல் 14 வயது வரையிலானவர்களுக்கு கட்டாய இலவச கல்வி கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்கி மே 29 ஆம் தேதியில் முடிவடைகிறது.

ஆனால், இந்த ஆண்டு கரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "கரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அறிவிப்போ? தெளிவுப்படுத்துதலையோ? வழங்கவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளதும், கல்வி கட்டணத்தில் 40 விழுக்காடு வரை வசூலிக்கலாம் என, ஜூலை 17ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 விழுக்காடு இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட உத்தரவிட வேண்டும். அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 விழுக்காடு இடங்களை உடனடியாக ஒதுக்கி வைக்கும்படி உத்தரவிட வேண்டும்" என, கோயிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (ஆக.4) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி இம்மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.