மத்திய அரசு கொண்டுவந்ததுள்ள வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 20ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விவசாயிகளுக்குப் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் கோயம்புத்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சியினர் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் கைகளைத் தட்டியபடி மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.