ETV Bharat / state

60 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இருவருக்கு சிகிச்சை!

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் அருகே 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான காரிலிருந்து இருவர் உயிர் தப்பினர்.

60 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இருவருக்கு சிகிச்சை!
Coonoor car accident
author img

By

Published : Oct 19, 2020, 7:16 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலுள்ள 12ஆவது கொண்டை ஊசி வலைவில் கட்டுப்பாட்டினை இழந்து கார் ஒன்று 60 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதில், நல்வாய்ப்பாகக் காரிலிருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 60 அடி பள்ளத்தில் கிடந்த இருவரையும் பர்லியாறு பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து மீட்டு வெளியே அழைத்து வந்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கரூரைச் சேர்ந்த தங்கராஜ் (50), பழனிசாமி (48) என்பது தெரியவந்தது. இருவரும் கூடலூர் அருகிலுள்ள தாளூரிலிருந்து கரூர் பகுதிக்குக் காரில் திரும்பியுள்ளனர்.

அப்போது, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 12ஆவது கொண்டை ஊசி வலைவில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டினை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளத்தாக்கில் இருந்து வெளியே வந்த பழனிசாமி கூறுகையில், "நாங்கள் வந்த காரின் பிரேக் திடீரென பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தோம்.

ஆனால், நாங்கள் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினோம்" எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் சிகிசைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.