இது தொடர்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் கணேஷ், "தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் சிலிண்டர் விநியோகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 250 ரூபாய் என சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். பிஎஃப், இஎஸ்ஐ, பென்சன் ஆகியவற்றுக்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஏஜென்சியின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
தேனியில் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட சிலிண்டர் டெலிவரி தொழிலாளி முத்து கருப்பையா மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். எனவே சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 23ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
எங்களின் கோரிக்கையை ஏற்று ஓ.டி.பி நம்பர் காட்டும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்தார். இதன்போது மாநில செய்தி தொடர்பாளர் ஹேமநாதன், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.