ETV Bharat / state

'கறுப்பர் கூட்டத்தை விரைவில் காவி கூட்டம் ஓடோட விரட்டும்!'

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கறுப்பர் கூட்டத்தை காவி கூட்டமான நாங்கள் ஓடோட விரட்டும் காலம் விரைவில் வரவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

கருப்பர் கூட்டத்தை விரைவில் காவி கூட்டம் ஓடோட விரட்டும் - பாஜக தலைவர் முருகன்

author img

By

Published : Sep 23, 2020, 9:46 PM IST

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜகவின் மகளிரணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டத்தை ஓட ஓட விரட்டிய காவி கூட்டத்திற்கு என் நன்றிகள்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள கறுப்பர் கூட்டத்தை இந்தக் காவி கூட்டமானது விரைவில் ஓட ஓட விரட்டுவோம்.

பாஜக - அதிமுக கூட்டணியில் எந்தவித பிரச்னையும் இல்லை. அவர்களுடைய உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது.

மத்திய அரசு கொண்டுவரும் பல நல்ல திட்டங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்.

விவசாயம் பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? மத்திய அரசு எந்தச் சட்டம் கொண்டுவந்தாலும் கண் மூடிக்கிட்டு அதை எதிர்ப்பது மட்டுமே ஸ்டாலின் செய்துவருகிறார். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். அதனை மேம்படுத்த நிறைய தொழில்நுட்பங்களை கொண்டு வருவது தான் இந்த சட்டத்தின் அடிப்படையாக உள்ளது.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை நாங்கள் பலமுறை வெற்றி பெற்றுள்ளோம். அது எங்களுக்கு பலமான பகுதி. வேட்பாளர் குறித்து மத்திய தலைமை முடிவு செய்யும்" என கூறினார்.

முன்னதாக, பாஜகவின் நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.