திமுகவைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையின் ஏழு வெவ்வேறு பகுதிகளில் நேற்று (செப்.22) போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில், சென்னை நங்கநல்லூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாநில துணைத் தலைவர் எம்.எம்.ராஜா தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பிரதமர் மோடி தருவதாய் கூறிய 15 லட்சம் ரூபாய் எங்கே எனக் கேட்ட முதியவரை, பாஜக தொண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். இந்நிலையில், இதைக் கண்ட காவல் துறையினர் அந்த முதியவரை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
![பிரதமர் தருவதாக சொன்ன ரூ. 15 லட்சம் எங்கே என கேட்ட முதியவரைத் தாக்கிய பாஜகவினர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10:39:37:1600794577_tn-che-06-bjpprotest-7209106_22092020222223_2209f_1600793543_876.png)
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பழவந்தாங்கல் பி.வி.நகரைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் துரை (வயது 67) என்பதும் தெரியவந்தது.
அதேபோல், சென்னை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் அங்கு தென்பட்ட திமுகவினரின் சுவர் விளம்பரங்களை அழித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.