தமிழ்நாடு முழுவதும் இன்று திருவாரூர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வானது ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் நலன் கருதி தற்போது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் உள்ள 18-மத்திய பல்கலைக்கழகங்களிலும் 141- தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அம்மாவட்டத்தில் ஐந்து தேர்வு மையங்களில் காலையில் 700 மாணவர்கள் மாலையில் 1, 200 மாணவர்கள் உள்பட 2, 200-மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.