ETV Bharat / state

அண்ணா பதக்கம் பெற தகுதியுள்ள அரசு ஊழியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு! - Anna medal

கன்னியாகுமரி: ஆபத்துக் காலங்களில் உயிர்களை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்கள் செய்த குமரி மாவட்ட அரசு ஊழியர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அண்ணா பதக்கம் பெற தகுதியுள்ள அரசு ஊழியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு !

author img

By

Published : Nov 18, 2020, 12:20 PM IST

இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆபத்துக் காலங்களில் உயிர்களை காப்பாற்றுதல், திருடர்களிடமிருந்து உடைமைகளை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களைச் செய்த அரசு ஊழியர்களுக்கு அண்ணா பதக்கம் 2021ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

இந்த பதக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த விபரத்தை இணைக்க வேண்டும்.

http://awards.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.