திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு நடைபெற்றுவந்த குடிமராமத்து பணி போன்றவற்றை நேரில் பார்வையிட்ட அவர் பொதுமக்கள் மத்தியில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஆவடி தொழில் நகரம் மட்டுமல்லாமல் ஆன்மிக நகரம் கூட. அதேபோல் ஆவடி தொகுதியில் 75 குளங்கள்,15 ஏரிகள் என அதிக நீர்நிலைகளைக் கொண்டது.
நீர் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை. நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டைத்தான் சூர்யாவும் தெரிவித்துள்ளார். இதில் எந்த தவறுமில்லை. அவர் நல்லெண்ணத்தில் தான் அத்தகைய கருத்துகளை கூறியுள்ளார் என நான் நம்புகிறேன்.
நீட் தேர்வு விவகாரத்திர் திமுகதான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.
நீட் தேர்வை கொண்டு வருவதற்கு முதல் விதையை போட்டது திமுக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகள் தான்" என தெரிவித்தார்.