திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள பொத்திபாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.யுவராஜா (32). இவர் காரக்பூரிலுள்ள ஐஐடியில் எம்.டெக் (ஏரோஸ்பேஸ்) பட்டம் பெற்றுள்ளார்.
இவர், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்குத் தியிரும்பியுள்ளார்.
இந்நிலையில், யுவராஜா கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை ரயில்வே தட்கல் முன்பதிவுக்காக போலியாக சூப்பர் தட்கல், சூப்பர் தட்கல் புரோ என்ற இரு செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்தச் செயலியானது ரயில்வே தட்கல் முன்பதிவை வேகமாகவும், விரைவாகவும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் உருவாக்கியுள்ளார். இதனை 1 லட்சம் பேர் ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதன் மூலமாக யுவராஜ் 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். தற்போது, இரு செயலியையும் அப்டேட் செய்தபோது போலி செயலி என்பது தெரியவந்ததது.
இதனையறிந்த, சென்னை ரயில்வே சைபர் கிரைம் அலுவலர்கள், திருப்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவியுடன் யுவராஜை கைது செய்தனர்.