திருப்பூர் : திருப்பூர் நாச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (23). தனியார் நிறுவன பிராட்பேண்ட் இணைப்பு பிரிவில் வேலை பார்க்கிறார். இவர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பூபதி என்பவர் வீட்டில் கொடுத்த இணைப்பு, மின்கம்பத்தில் உள்ள உயர்மின்அழுத்த கம்பியில் உரசுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அதனை சரி செய்யச் சென்றார்.
பிராட்பேண்ட் இணைப்பை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் ராஜாவின் கை உயர் அழுத்த மின்சார கம்பியில்பட்டு துாக்கி வீசப்பட்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் காரணமாக பூபதியின் வீட்டில் இருந்த மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :தாராபுரம் மலைத் தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்பட 10 பேர் காயம்