ETV Bharat / state

உயர்மின் கோபுரங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை! - உயர்மின் கோபுரங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை

திருப்பூர்: உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட எம்பி.,க்கள் குழுவினர், ‘உயர்மின் கோபுரங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை’ எனத் தெரிவித்தனர்.

உயர்மின் கோபுரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்பி ஜோதிமணி

author img

By

Published : Feb 26, 2020, 11:28 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடம் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 5 எம்பி.,க்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, உயர்மின் கோபுரத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டறிய கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் , திருப்பூர் எம்.பி சுப்பராயன், கரூர் எம்.பி ஜோதிமணி, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி , பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட எம்பி.,க்கள் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

உயர்மின் கோபுரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐந்து எம்பி.,க்கள்

ஆய்வுக்கு பின்னர் கோவை எம்பி பி.ஆர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இணைப்பு எதுவும் இல்லாமல், ட்யூப்லைட் எரிகிறது. லைன் டெஸ்டர் வைத்து பார்த்தாலும், மின்சாரம் இருப்பதை பிரகாசமாகக் காட்டுகிறது. உயர்மின்கோபுரம் அமைப்பதை 5 எம்.பி களும் கடுமையாக எதிர்க்கிறோம். இத்திட்டத்தால், நிச்சயம் உடல்நலத்திற்கு கேடு ஏற்படும் என்பதால், மாநில அரசு தலையிட்டு இத்திட்டத்திலிருந்து மக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், என்று பேசினார்.

”சீரியல் விளக்குகள் இணைப்பு வடம் (கேபிள்) இல்லாமல் ஒளிர்வதை பார்க்க முடிகிறது. மக்களின் பாதுகாப்பை முறைப்படுத்த வேண்டும். விவசாயிகளின் அரசாங்கம் என்று சொல்ல கூடிய மாநில அரசு, இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது” என்றார் கரூர் எம்.பி ஜோதிமணி.

தொடர்ந்து திருப்பூர் எம்.பி சுப்பராயன் பேசியதாவது: வளர்ச்சித் திட்டம் மக்களுக்கு எதிராக உள்ளதால், மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். புதைவடமாகக் கொண்டு செல்வது சாத்தியம். எனினும், அதனை செயல்படுத்தவில்லை. மின்சாரம் எங்களது உடலில் பாய்வதை இண்டிகேட்டர் சுட்டிக்காட்டுகின்றது என்பதற்கு நாங்கள் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே சாட்சி, என்று அவர் பேசினார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுத
ல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.