ETV Bharat / state

திருப்பூரில் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை..மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை! - tiruppur mayor dinesh kumar

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

warning tax evasion
வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை
author img

By

Published : Aug 1, 2023, 10:17 AM IST

வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை திருப்பூர் மேயர்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய மேயர், ‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயன்பாட்டில் இருந்தும், வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து இரண்டு வார்டுகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த போது வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் வரிவிதிப்பு இல்லாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தாங்களாகவே முன்வந்து புதிய வரியை போட்டு வரியை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் புதிய வரியை போட்டு வரி செலுத்தவில்லை என்றால் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வேறு பணியிடங்களுக்கு மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல், பழைய மார்க்கெட் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் கட்டப்பட்டி இருந்த நிலையில் பூ வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டன் மார்க்கெட் வளாகத்தை விட்டு புதிய பூ மார்க்கெட்டுக்கு வராததால் மாநகராட்சிக்கு வருவாய் பாதிக்கப்படுவதாகவும், இதில் யார் தலையீடு உள்ளது என்பதை மாநகராட்சி மேயர் வெளிப்படைத்தன்மையோடு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட குடிநீர் வாரிய ஆய்வாளர்கள் மற்றும் குடிநீர் திறப்பாளர்கள் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை எனவும் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் பணிகளை முறையாக செய்வதில்லை என குற்றம் சாட்டினர்.

இதில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் பொருட்டு ஆட்கள் பற்றாக்குறை இருந்தாலும் தற்காலிகமாக, ஆட்களை பணியமர்த்தி சிறப்பு முகாம்கள் நடத்திட வேண்டும். அய்யனார் சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்ட போதிலும், தற்போது வரை பணிகள் துவங்கவில்லை மேலும், அது பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்கள் செல்ல மிகவும் கடுமையாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து தண்ணீர் லாரி செல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பூ மார்க்கெட் ஏலத்தில் மறைமுகமாக மாநகராட்சி ஆதரவு தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர். பூ மார்க்கெட் கட்டடத்தை சிலர் உள் வாடகைக்கு விடுகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும், பொது பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடம், தார் சாலைகளுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக உள்ளது, இதை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் குறைப்பதற்கு தீர்மானம் போட வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு 9 சதவீதம் ஜிஎஸ்டி வருவதால் அவர்கள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது.

சாலைகளில் முக்கிய இடங்களில் மட்டும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருவதாகவும், குடியிருப்பு பகுதிக்குள் வருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர். எனவே கொசு மருந்து அடிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்படுவதாகவும், மாநகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டினர். இதனை அடுத்த கூட்டத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்’. இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:ஆரணியில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.