குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் ராதாரவி பேசுகையில், "திமுகவினர் தங்கள் பள்ளியில் இந்திதான் கற்றுத்தருகின்றனர். அங்கு தமிழ் பேசினால் குற்றம், ஏமாளியாக இருந்துவிடாதீர்கள். அனைவரும் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்.
வீரமணி உள்ளவரை திமுக உருப்படாது. திமுக கொள்கை பரப்புச் செயலாளர் நயன்தாரா குறித்து பேசிவிட்டேனாம். அதனால் என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். திமுகவில் கூட்டம் வரும். ஆனால், 2000 கொடுத்தால் மாறிவிடுவார்கள்.
பாஜக தோற்கிறது என்கிறார்கள்; தோற்றால் என்ன, ஜெயித்தால் என்ன பாஜக இருக்கிறது. எங்கிருந்தாலும் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள், இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள்.
என்னைத் தொடர்ந்து பல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். நடிகர் கார்த்திக்கிடம் பாஜகவில் இணைவது குறித்து பேசியிருக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: 'நயன்தாரா பற்றி வராத செய்தியே இல்லை' - ராதாரவி பேச்சால் சர்ச்சை