ETV Bharat / state

காங்கேயம் மாட்டு பால் பண்ணை அமைக்க கோரிக்கை! - காங்கேயம் மாடு எந்த மாவட்டங்களில் வளர்க்கப்படுகிறது

திருப்பூர்: புகழ்பெற்ற காங்கேயம் இன மாடுகளின் பாலிற்கு என தனியான சந்தையை உருவாக்கும் வகையில் அதன் பால் பண்ணைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

tirupur Farmers' request govt to set up a  kangayam bull's milk diary
காங்கேயம் மாடு
author img

By

Published : Dec 16, 2019, 3:49 AM IST

'காங்கேயம்' என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காங்கேயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கேயம் பகுதியை பூர்விகமாகக் கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப்படுகின்றன.

குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கேயம் இன பசுக்களைக் கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது மரபாக உள்ளது.

சுத்தமான பால் கிடைப்பதில்லை என மக்கள் சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கிச் செல்கின்றனர். காங்கேயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு லிட்டர் காங்கேயம் மாட்டு பால் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கேயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் மானவாரி நிலங்களில் வளரும், கொழுக்கட்டை புல் வகையாகும். இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதிக திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இருப்பதால், இந்த பால் அதிக சத்தாக உள்ளது.

திருப்பூரில் வளர்க்கப்படும் காங்கேயம் மாடுகள்

இதற்காக காங்கேயம் மாடுகள் அதிகமுள்ள காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர், தாராபுரம் பகுதிகளில், திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட ஏதேனும் ஒரு பகுதியில் காங்கேயம் நாட்டு மாடு இன பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை தொடங்க வேண்டும் எனவும், விற்பனை மையத்தை அமைத்தால் விவசாயிகளிடம் இருந்து காங்கயம் நாட்டு மாடு பால் உற்பத்தியும் பெருகும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு தரமான பால் கிடைக்கும், அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வாருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க: '650 காளைகளுக்கு மட்டுமே டோக்கன்' - பாலமேடு ஜல்லிக்கட்டு குழு தீர்மானம்!

Intro:உலகப் புகழ் பெற்ற காங்கேயம் நாட்டு மாட்டு பால் பண்ணை காங்கேயத்தில் அமைக்க விவசாயிகள் வேண்டுகோள்Body:புகழ்பெற்ற காங்கேயம் இன மாடுகளின் பாலிற்கு என தனியான சந்தையை உருவாக்கும் வகையில் பால் பண்ணைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கேயம் மாடு வளர்க்கும் விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
காங்கேயம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காங்கேயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கேயம் பகுதியை பூர்விகமாக கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப்படுகின்றன. குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கேயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது மரபாக உள்ளது.
சுத்தமான பால் கிடைப்பதில்லை என மக்கள் சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கி கொண்டு செல்கின்றனர். காங்கேயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கேயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் மானவாரி நிலங்களில் வளரும், கொழுக்கட்டை புல் வகையாகும்.
இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதின திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இப்புல்லில் இருப்பதால்,இந்த பாலுக்கு கிராக்கி உள்ளது.
இதற்காக காங்கேயம் மாடுகள் அதிகமுள்ள காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர்,தாராபுரம் பகுதிகளில்,திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட ஏதேனும் ஒரிரு பகுதியில் காங்கேயம் நாட்டு மாட்டு இன பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை துவங்க வேண்டும். அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
விற்பனை மையத்தை அமைத்தால் விவசாயிகளிடம் இருந்து காங்கயம் நாட்டு மாட்டு பால் உற்பத்தியும் பெருகும், மக்களுக்கு தரமான பால் கிடைக்கும்.அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வாருவாய் கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.