திருப்பூர், வடக்கு, தெற்கு மற்றும் அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கான பரிசோதனை முகாம் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 523 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனை சார் ஆட்சியர் செண்பகவள்ளி, திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
வாகனங்களைச் சோதனை செய்ததில் 107 பள்ளி வாகனங்களுக்கான தரச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்டுள்ள வாகனங்கள் 7 நாட்களுக்குள் குறைகளை சரி செய்து மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.