திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் பெயர் பலகையை திறப்பதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் திருப்பூருக்கு வருகை தந்தார். அவருக்கு புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் திருப்பூரிலிருந்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவை செல்ல கடுமையாக உழைக்க வேண்டும் எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநில தலைவர்