தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் வீடியோ கிராஃபர்கள் நியமிக்கப்பட்டு, வரக்கூடிய சூழ்நிலையில் இந்தாண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் டெண்டர் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு வீடியோ கிராஃபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வீடியோ கிராஃபர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுவதாகவும், அதனால் டெண்டர் முறையை ரத்துசெய்து வீடியோ கிராஃபர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட புகைப்பட சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தங்கள் மனுவை பரிசீலிக்காதபட்சத்தில் சுமார் 12 ஆயிரம் வீடியோ கிராஃபர்கள், குடும்பத்தினர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.